'தி.மு.க., தலைவர் கருணாநிதியால், இனிமேல் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது' என, டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளதால், குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவும், கட்சியை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும்  அடுத்த மாதம், 19ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தலைவர் பதவியை பதவி ஏற்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக மாநில நிர்வாகிகளை, அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவர் , வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 18-ம் தேதி, காவேரி மருத்துவமனைக்குச் சென்று ஒரே நாளில் வீடு திரும்பினார். அப்போது டிரக்யாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது மருத்துவமனைக்கு சென்று வந்ததிலிருந்தே அவர் சோர்வாகவே இருக்கிறார் படுக்கையிலிருந்து தூக்கி உட்கார வைத்தாலும், உட்காராமல் துவண்டு  படுத்துக் கொள்கிறாராம். கருணாநிதி உடல்நிலையில் வழக்கத்தைவிட சோர்வு காணப்படுகிறாராம்,  நாளுக்கு நாள் அவரது உடல் துவண்டபடியே  இருக்கிறதாம்.

இந்நிலையில், லண்டனிலிருந்து திரும்பிய  ஸ்டாலின், அன்றைய தினம் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று பார்த்துள்ளார். அருகில் இருந்து, மருத்துவமனையில் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உடல்நிலைகுறித்து கேட்டாராம்.  அப்போது  ஸ்டாலினிடம் சில தகவல்களைச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதனையடுத்து, தனது உறவினர்களை உடனடியாக வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார். ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு உட்பட குடும்ப உறுப்பினர்கள், 18 பேர் கோபாலபுரம் வீட்டிற்கு வந்துள்ளார்கள். அப்போது, அப்பாவால், பழைய மாதிரி சுறுசுறுப்பாக ,செயல்பட முடியாது; பூரண ஓய்வு எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் சொல்வதாக குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.  

இந்நிலையில், ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின்.” கட்சியை முழுமையாக, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, விரும்பினாராம். அதற்கான முதற்கட்ட வேலைகளை, அடுத்தடுத்து செய்து வருகிறார். தற்போது அறிவாலயத்தில், மூத்த ஊழியர் களின் அறைகளில், கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. ஸ்டாலின் வீட்டிற்கு, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணிக்கு, நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அறிவாலயத்தில் பல ஆண்டுகளாக  வேலை செய்வோர் மீது, அதிருப்தியில் உள்ள ஸ்டாலின், அவர்களை ஓரம்கட்டும் பணிகளை துவக்கி உள்ளார். அதுமட்டுமின்றி, தனக்கு கட்டுப் படுபவர்களை, மாநில நிர்வாகிகளாக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகனுக்கு கவுரவ பதவி அளிக்கப்பட்டு, அவரிடமுள்ள மாநில பொதுச்செயலர் பதவியை, துரைமுருகனுக்கு வழங்க உள்ளதாம்.

அதேபோல, ஐ.பெரியசாமிக்கு மீண்டும் துணை பொதுச்செயலர் பதவியும், மற்றொரு துணை பொதுச்செயலர் வி.பி.துரைசாமியின் பதவி, அ.ராசாவுக்கும் வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கான ஒதுக்கீட்டில், துணை பொதுச் செயலராக உள்ள, சுப்பு லட்சுமி ஜெகதீசனின் பதவிய பிடுங்கி.  மகளிர் அணி செயலராக உள்ள கனிமொழிக்கு,  வழங்கப்படுகிறது.