இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘’திமுகவுக்கும், திகவுக்கும் இலங்கை தமிழன் நியாபகம் வரும். இல்லையென்றால் எந்தத் தமிழனின் நியாபகமும் வராது.  இவர்கள் ஈழம் வியாபாரிகள். அவர்கள் சொல்கிரார்கள். பெயர் சொல்ல விரும்பவில்லை, பிரபாகரனுக்கே அரசியல் குருவாக இருந்தவரை மூன்றுமுறை சந்தித்து பேசி இருக்கிறேன்.  அவர் சொன்னார் இந்தியாவால் தான் எங்களை காப்பாற்ற முடியும் என்று சொன்னார். ஆனால் அவர்கூட குடியுரிமையை கொடுத்து விடுங்கள் நாங்கள் இங்கே வந்து விடுகிறோம் எனச் சொல்லவில்லை.

உரிமையோடு, பாதுகாப்போடு நாங்கள் இலங்கையில் வாழ வேண்டும். ஈழ மண்ணை நாங்கள் இழக்கவில்லை எனக் கூறினார். ஆனால் மக்களை ஏமாற்று அதற்காக இந்த வீரமணியும், ஸ்டாலினும் பண்ணுகிற வேலை இருக்கே... தர்மசங்கப்படுத்துவதற்கே எங்க ஊர்ல நிறைய பேர் இருக்கிறாங்க. ஒருத்தர் பொருளாதார குற்றவாளி ப.சிதம்பரம். இலங்கை தமிழர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். 22 எம்.பிகள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த எம்.எல்.ஏ இருக்கிறானா? எம்.பி. இருக்கிறானா?

பாகிஸ்தானில் உள்ள ஊடுருவல்காரர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இங்கே இருக்கிறவன் ஊர்வலம் சென்றான் என்றால் உள்ளபடியே இங்கே ஊர்வலம் சென்றதை அனுமதித்ததே நம்முடைய தேசபக்தியில் சின்ன களங்கம் இருக்கிறேன் என்கிறேன்.

இத்தாலி நாட்டில் இருந்து வந்த சோனியா காந்தியின் குடியுரிமையை கூட நாம் பிடுங்கவில்லை. சாணக்கியர் சொல்லி இருக்கிறார். அரச குடும்பத்தில் அன்னிய கன்னி வந்தால் அது விஷக் கன்னிக்கு சமம் எனச் சொல்லி இருக்கிறார். இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டால் அது தார்மீக உரிமை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் ஒரு தமிழன் கூட கொல்லப்படவில்லை. 

ஆனால், காங்கிரஸ்- திமுக ஆட்சியில் இலங்கையில் முல்லிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றார்கள். அவர்கள் இன்று வீதிக்கு வரலாமா? இலங்கையில் 85 ஆயிரம் பெண்களை விதவைகளாக்கிய சோனியாவும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் இதைப்பற்றி பேசலாமா? அதனால் தான் சொல்கிறேன். இலங்கை தமிழர்கள் பற்றி பேசும் அவர்கள் இப்போது முட்டாள், அல்லது அயோக்கியன். திமுகவினர் இனி ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம்’’என அவர் பேசியுள்ளார்.