Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்துக்கு உண்மையிலேயே முதலீட்டை கொண்டுவந்தா பாராட்டு விழா நடத்துவோம் ! ஸ்டாலின் அதிரடி பேச்சு !

அமெரிக்கா முதலீடு ரூ.2,780 கோடி தமிழகத்துக்கு வரும் என்று சொன்னால், முலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு கூட்டம் நடத்த தி.மு.க. தயார் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

dmk will ready to arrange function to eps
Author
Coimbatore, First Published Sep 6, 2019, 7:38 AM IST

தி.மு.க. உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர்களில் ஒருவருமான மு.பெ.சாமிநாதனின் மகன் ஆதவன் - ஸ்ரீநேத்ரா ஆகியோரின் திருமணம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. 

திருமணத்தை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது 
தமிழ்நாட்டின் முதலமைச்சர்  வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு போயிருக்கிறார். முதலீட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போவதாக அறிவித்து விட்டுப் போயிருக்கிறார். 

dmk will ready to arrange function to eps

நியாயமாக, ஒரு முதலமைச்சர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனியாக சென்றிருந்தால் மக்கள் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் இருக்கலாம். ஆனால், இவர்  மட்டுமா போயிருக்கிறார்?. அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் கூட செல்லலாம். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அமைச்சரவையே சென்றிருக்கிறது.

பத்திரிகைகளில் என்ன செய்தியென்றால், ஏறக்குறைய ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு வந்திருக்கின்றது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று காலையில் பக்கம் பக்கமாக தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. 

dmk will ready to arrange function to eps

ரூ.2,780 கோடி முதலீட்டைப் பெற்றிருக்கின்றோம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம், என்று ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள். செய்தியினை வெளியிடுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் முதலமைச்சர்  பேசிய பேச்சும் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றது.

என்ன பேசி இருக்கின்றார் என்றால் 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தினோம். அப்படி நடத்திய நேரத்தில் ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீட்டை நாங்கள் பெற்றோம். அந்த முதலீட்டை பெற்ற காரணத்தினால் 220 தொழில்நிறுவனங்கள் பணியைத் துவங்கிவிட்டது என்று ஒரு செய்தியினைச் சொல்லியிருக்கிறார்.

dmk will ready to arrange function to eps

இது ஒரு அப்பட்டமான பொய். நாங்கள் இதைத்தான் கேட்கின்றோம், 220 தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டது என்று ஒரு செய்தியினை, வெளிநாட்டிற்கு சென்று முதலமைச்சர்  பேசி இருக்கின்றார் என்றால், எந்த நிறுவனம்? எந்த ஊரில்? எங்கு துவங்கப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கையாக வையுங்கள் என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நான் தொடர்ந்து பேசி இருக்கின்றேன். இப்போதும் இந்த திருமண விழாவில் நான் பேசுகின்றேன்.

இப்போது அமெரிக்காவிற்கு சென்று ரூ.2,780 கோடிக்கு முதலீட்டை பெற்றிருக்கின்றோம் என்று பேசியிருக்கின்றார் என்றால், அதை இன்றைக்கு பத்திரிகைகள் படம் பிடித்து பக்கம் பக்கமாகவும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வந்தால் மகிழ்ச்சிதான். அதனை உள்ளபடியே வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்.

dmk will ready to arrange function to eps

இது உள்ளபடியே வருமென்று சொன்னால், தி.மு.க. சார்பில் நாங்களே முதல்-அமைச்சருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் என அதிரடியாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios