அதிமுகவில் இருந்த பழைய நினைப்பில், தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான தங்கதமிழ்செல்வன் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு இதுபோல செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்டு எழுந்து வருகிறது. 

இந்நிலையில், தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்த பொட்டிபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன்;- வரும் சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடைசி தேர்தலாகும். உதயநிதியின் பயணம் வெற்றிகரமாக முடிவடையும் எனவும், திமுக படுதோல்வி அடையும் எனவும் கூறியதால் சுற்றியிருந்தவர்களும் செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

 

 சுதாரித்துக் கொண்ட தமிழ்செல்வன், அதிமுக படுதோல்வி அடையும் என திருத்திக் கொண்டார். தர்மசங்கடமான புன்னகையுடன், தயவுசெய்து மாத்திக்கங்கடா சாமிகளா என செய்தியாளர்களை பார்த்துக் சிரித்தப்படியே கூறினார்.