Asianet News TamilAsianet News Tamil

234 தொகுதியிலும் தனித்துப் போட்டி... தலைவரின் அந்தர் பிளானுக்கு ஆப்ஷனே கொடுக்காமல் கலாய்த்து தள்ளும் காட்பாடியார்!

திமுக கூட்டணி கட்சிகளுக்கும் தோழமை கட்சிகளுக்கும் தற்போது நடிப்பில் விரிசல் விழா ஆரம்பித்துள்ளது. ஆமாம், தலைவரின் இந்த மாஸ்டர் பிளானுக்கு மறுபேச்சே இல்லாமல் தெறிக்கவிடுகிறார் பொருளாளர். 

DMK Will be participate 234 constituency
Author
Chennai, First Published Nov 25, 2018, 7:23 PM IST

இதுநாள் வரை திமுக முன்னெடுத்த போராட்டங்களில் தோழமைக் கட்சியினர்  கைகோர்த்து களத்தில் இறங்கினர். திமுக  போன் போட்டு கூப்பிட்டாள் ஓடி வரும் அளவிற்கு  கூட்டங்களிலும் அக்கட்சித் தலைவர்கள் பங்கெடுத்தனர். அப்படி ஒரு  நடிப்பை வளர்த்துக்கொண்ட திமுக,  தேர்தல் நெருங்கிவிட்டதால் கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சியையும், தோழமைகளையும் கழட்டிவிட காய் நகர்த்தி வருகிறது.

இதன் முதல்கட்டமாக,   தமிழகத்தில் கூட்டணியின் தலைவராக ஸ்டாலின் இருக்கையில் திருமாவோ ராகுல், சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து தனி லாபி செய்து கொண்டிருக்கிறார். இது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை! இதுவே தி.மு.க.வின் ஆத்திரம். ஆக ஆத்திரமும், - கோபமும் மோதிக்கொண்டதன் விளைவாக விரிசல் இன்னமும் அதிகமாகி, வெடித்து அது வெளியே தெரிந்துவிட்டது. 

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியின் போது பேசிய துரைமுருகன், “நாங்கள் இன்னும் முழுமையான கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் எங்களிடம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளனர். அவர்கள் ‘பழைய கஸ்டமர்கள்’ என்றார். ’கஸ்டமர்கள்’ அதுவும், ‘பழைய கஸ்டமர்கள்’ என்று அடையாளப்படுத்துவது கேவலத்தை தருகிறது. கஸ்டமர்! எனும் வார்த்தைக்கு மோசமான விளக்கங்களும் இருக்கிறது. இதனால் கடுப்பான தோழமையும் கூட்டணியும் ஸ்டாலினிடம் பஞ்சாயத்துக்கு சென்றதாம், ஆனால் தலைவரோ கண்டுகொள்ளவே இல்லயாம். ஆகா இது தனியாக களமிறங்க இவர்களை கழட்டிவிடும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

ஆமாம், தற்போது இருக்கும் சூழலில் நாளை தேர்தல் நடத்தினாலும்  களத்தில் பெரும்பலத்துடன் இருக்கிறது. கருணாநிதி  இருக்கும்போதே ஸ்டாலினின் விருப்பம் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நிற்க வேண்டும் என்பதுதான். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று 135 இடங்களைப் பெற்ற பின்பும்  இதை பல நிர்வாகக் கூட்டங்களில் வலியுறுத்தியிருக்கிறார். இப்போது பல நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டார்கள்.  அதிமுக சிதறிக்கிடக்கிறது. மக்களுக்கு ஆட்சி மீது பெரும் அதிருப்தி இருக்கிறது.  இந்த சமயத்தில் திமுக 234 தொகுதிகளிலும் தனித்து  உதயசூரியன் சின்னத்தில் நிற்க எந்த நிபந்தனையுமின்றி வந்தால்  கூட்டணி வைத்து  களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளதாம் திமுக.  தலைவரின் இந்த அந்தர் பிளானை புரிந்துகொண்ட பொருளாளர் எந்த ஆப்ஷனுமே கொடுக்க வேண்டாம்  என களத்தில் குதித்துள்ளாராம்.  

Follow Us:
Download App:
  • android
  • ios