எக்ஸின் போல்! ஒட்டுமொத்தமாக மோடி அண்ட்கோவுக்கு சாமரசம் வீசியிருப்பதன் நேரடி விளைவு எங்கே தெரிந்ததோ, இல்லையோ ஸ்டாலின் குடும்பத்தில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. ’ரிசல்ட்டை பொறுத்து பி.ஜே.பி. கூட்டணியையும் நெருங்கலாம் தப்பில்லை!’ என்று சபரீசன் சொல்ல, ‘எந்த காலத்திலும் அப்படியொரு முடிவு கூடாது. ராகுலை பிரதமராக்குறோம், அப்பாவை முதல்வராக்குறோம்.’ என்று உதயநிதி உறுதியாக நிற்கிறார். 

மருமகன் மற்றும் மகனுக்கு இடையில் வெடித்திருக்கும் இந்த போரைப் பார்த்து ஸ்டாலின் குழம்பி நிற்க, கழக முக்கிய நிர்வாகிகளோ பதறி நிற்கின்றனர். பாதி பே சபரீசனை சப்போர்ட் செய்ய, மீதி பேரோ உதயநிதிக்கு வழு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

சபரீசன் சொல்வதிலும் தப்பில்லை என்பது ஒரு தரப்பு நிர்வாகிகளின் வாதம். அதாவது ”எக்ஸிட் போல்களின் முடிவுகள் ஒட்டுமொத்தமாகவே மோடியை ஆதரிக்கின்றன. இதனால் மீண்டும் அவரே வந்தமர்வாரோ என்று எண்ணிட தோன்றுகிறது. அதேவேளையில், தமிழகத்தில் அ.தி.மு.க. பெரியளவில் வெற்றி பெறாது என்று புரிகிறது. 

பி.ஜே.பி. அமோகமாக வந்து, என்ன செய்தாலும் ராகுல் பிரதமராக வாய்ப்பில்லை எனும் நிலை வந்தால் தாராளமாக பி.ஜே.பி.யை நாம் ஆதரிக்கலாம். நம்முடைய எண்ணம், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதுதான். எனவே ராஜதந்திரமாக மோடியுடன் கைகுலுக்கி, எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அரசியலில் சந்தர்ப்பவாதமும் அவசியம்! என்கிறாராம் சபரி. 
ஆனால் உதயநிதியோ “மதவாத பி.ஜே.பி., உதவாத அ.தி.மு.க. அரசு இரண்டையுமே தமிழக மக்கள் மிக கடுமையாக எதிர்க்கிறார்கள். எனவேதான் நம் கூட்டணியை மானசீகமாக விரும்புகிறார்கள். இந்த  வரவேற்பு பிரசாரத்தில் நன்றாகவே பளிச்சிட்டது. 

எனவே தேர்தல் முடிவுகள் ஒன்றும் பி.ஜே.பி.க்கு முரட்டு மெஜாரிட்டியை தரப்போவதில்லை. ஓரளவு பெரும்பான்மையுடன் அவர்கள் வந்தாலுமே கூட, கூட்டணிகளின் உதவிகள் இல்லாமல் அரசமைக்க முடியாது. அந்த நேரத்தில் நாம் காங்கிரஸுக்கு கைகொடுத்து, முழு சாணக்கியத்தனமாக செயல்பட்டு, பி.ஜே.பி.யின் முயற்சியை முறியடித்து.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்தே தீரவேண்டும்,ராகுலை பிரதமராக்கியே தீர வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் நாம் நினைத்த அரசியல் மாற்றத்தை மிக எளிதாய் கொண்டு வர முடியும். பி.ஜே.பி.யோடு கூட்டணி எனும் எண்ணமே எந்த சூழலிம் வேண்டாம். மக்கள் மன்னிக்க மாட்டார்கள் நம்மை.” என்கிறாராம். 

இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு ஸ்டாலின் விழிபிதுங்க காத்திருக்கிறாராம் மே 23-க்காக. 
ஜெயிக்கப்போவது மகனா அல்லது மருகனா?