தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்வது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துவிட்ட நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 17ம் தேதி 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1000 செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். பொதுத்தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.25,000 மற்றும் தனித்தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.15,000.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
