திமுக ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து உருட்டு கட்டை மற்றும் கம்பியால் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து உருட்டு கட்டை மற்றும் கம்பியால் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி வடக்கு மாவட்டத்தின் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகிப்பவர் ரத்தினசபாபதி (62)​. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது சிலர் வீடு புகுந்து இவர்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.‌ கம்பி, உருட்டுக்கட்டை, நாற்காலி ஆகியவற்றைக் கொண்டு சுமார் ஐந்துக்கும் மேற்பட்டோர் தாக்கியதில் ரத்தினசபாபதியின் கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது.​ ​மேலும், ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர்.

இதையும் படிங்க;- 2016 ராதாபுரம் தேர்தல் முடிவு.. வழக்கை வாபஸ் வாங்க எதிர்பார்க்கும் அதிமுக இன்பத்துரை.. அப்பாவு முடிவு என்ன?

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது அந்த கும்பம் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து, அப்பகுதியினர் படுகாயமடைந்த ரத்தினசபாபதி மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி​த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;- அண்ணா பல்கலை மேடையிலும் அரசியலா..? அமைச்சர் பொன்முடியை போட்டு பொளந்த அண்ணாமலை.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உட்கட்சி பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைதுத செய்துள்ளனர். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.