அதிமுகவின் பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் விதமாக ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில், ஒரு டீமுக்கு 4 கோடி என மொத்த  20 கோடிபட்ஜெட்டை போட திட்டமிட்டிருக்கிறதாம் திமுக.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மெகா வெற்றியை பெற்றிருந்தாலும் நடக்கவுள்ள, விக்கிரவாண்டியின் இடைத்தேர்தல் வெற்றி ஸ்டாலினுக்கு அவசியமாகிறது. இரண்டு தொகுதிகளின் வெற்றி-தோல்வியால் ஆட்சியை கவிழ்க்கவோ ஆட்சி அமைக்கவோ, எந்த வகையிலும் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும். இதற்கடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்கிற இமேஜும் கிடைக்கும் எனவும் அறிவாலயம் யோசித்துள்ளது. 

அதிமுகவின் பண விநியோகத்தை தடுப்பது ஒரு பக்கம் இருக்க, பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் வகையில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில், களமிறக்கப்பட்டுள்ள 5 டீமுக்கு தலா 4 கோடி வீதம் மொத்த 20 கோடி பட்ஜெட்டை போட்டுள்ளதாம். அதற்கேற்ற வகையிலேயே வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி என்பதாலும், அதிமுக கூட்டணியிலுள்ள பாமகவின் வாக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வன்னியருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரில்லாமல், தளபதி யாரை கைக்காட்டினாலும் அவரை ஜெயிக்க வைக்கிறேன் என பொன்முடி சொன்னாலும், சீவி சண்முகம் என்ற ஒரு கெத்தான பார்ட்டியை வீழ்த்த ஜகத் ரட்சகன், ஏ.வ.வேலு, தா.மோ அன்பரசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அ.ராசா உள்ளிட்ட முக்கிய தலைகளை துணைக்கு அழைத்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, கிராமங்களிலேயே தங்கியிருந்து திண்ணைப்பிரசாரம் செய்ய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுகவிலுள்ள 65 மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும் தொகுதிக்குள் களமிறக்கியுள்ளார்களாம்.