மக்கள் சமூக நீதிப் பேரவை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது எனவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட போவதாகவும் தெரிவித்துள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களது முழு ஆதரவை கொடுப்பதாக மக்கள் சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது நாடு தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், தமிழகத்தின் வளம் மற்றும் உரிமைகளை பாதுகாக்க அதிமுக பாஜக வெற்றியை தடுத்தே ஆக வேண்டும் எனுபே ஒரே நோக்கம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ளனர் அந்த அமைப்பினர். நீட் தேர்வை கொண்டு வந்தும், கொங்கு மண்டலத்தில் குரும்ப கவுண்டர் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்வி கனவை நாசமாக்கிய பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டத்தை இயற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன் இது போன்ற நாட்டிற்கு எதிரான சட்டங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை தொடர்ந்து சிறையில் தள்ளும் கொடுஞ் செயல்களுக்கு எதிராக மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், பாஜகவின் இந்த அநீதிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து விடக்கூடாது என்பதற்காகவே மதவெறியை தூண்டி பாஜக அரசியல் செய்வதாகவும் அந்த அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். பாஜகவின் இந்த செயல்களுக்கு அதிமுக அடிமை வேலை செய்கிறது என்றும், அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மக்கள் சமூக நீதிப் பேரவை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது எனவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட போவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அந்த அமைப்பு உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுக-பாஜக வலுவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சமூக நீதி பேரவையின் ஆதரவு திமுகவுக்கு நிச்சயம் வலுசேர்க்கும் எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
