Asianet News TamilAsianet News Tamil

பாஜக செய்து விட்டது... திமுக தலித் ஒருவரை தலைவராக்குமா..? திருமாவை தூண்டும் ஹெச்.ராஜா..!

கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வற்புறுத்துவீர்களா? என திருமாவளவனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

DMK to make Dalit a leader ..? H. Raja to induce Thirumavalavan
Author
Tamil Nadu, First Published May 25, 2020, 3:53 PM IST

கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வற்புறுத்துவீர்களா? என திருமாவளவனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக சாதி அரசியல். சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித்சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும்  தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார். DMK to make Dalit a leader ..? H. Raja to induce Thirumavalavan

அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ’’பாஜக திறமையைப் பார்த்தே பொறுப்பு தருகிறது. ஏற்கனவே பங்காரு லக்ஷ்மண் அவர்களை தேசிய தலைவராக நியமித்தோம். தமிழகத்தில் டாக்டர்.கிருபாநிதியை அடுத்து சகோதரர் முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். ஆனால் கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வற்புறுத்துவீர்களா? என பதிலளித்துள்ளார்.

அடுத்து பாஜக சாதி அரசியல். தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக  வலியுத்துமா?அந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா? தலித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

DMK to make Dalit a leader ..? H. Raja to induce Thirumavalavan

அதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, ‘’பாராளுமன்ற துணை சபாநாயகர் வாய்ப்பு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே திரு.சூரஜ் பான் அவர்களை நியமித்தது பாஜக. இன்று மேதகு ஜனாதிபதி யாக மரியாதைக்குரிய திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் பாஜகவால் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த கோமாளிக் கேள்விகள் பாஜக விற்கு எதிராக எடுபடாது’’ என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios