நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியை  அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கைப்பற்றி உள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32333 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தோற்கடித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62229 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணன் 94562 வாக்குகளும் பெற்றனர். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2662 வாக்குகளையும் பெற்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.  விக்கிரவாண்டி தொகுதியை இழந்ததால் திமுகவின் பலம் 100 ஆகக் குறைந்தது. நாங்குநேரி தொகுதியை இழந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 7 ஆக குறைந்தது.