முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்டபேரவையில் திமுக நேரடியாக ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டபேரவையில் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது உரையை வாசித்தார்.
பின்னர் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஆளுநர் உரையின் மீது ஒவ்வொரு கட்சியும் தானாக கருத்தை தெரிவித்தனர்.
நேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநர் உரையில் 'அது இல்லை, இது இல்லை, இல்லை இல்லை என தொடர்ந்து பல இல்லைகளை குறிப்பிட்டு பேசினார்.
இன்று ஆளுநர் உரை மீதான விவாத்தின் மீது பதிலளித்த முதல்வர் ஓபிஎஸ் திமுக எதுவுமே இல்லை... இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என சுட்டிக்காட்டி பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் "நாங்கள் எப்போதுமே இல்லை இல்லை என்று சொல்லமாட்டோம்.உண்டு என்று சில வார்த்தைகளையும் சொல்வோம்" என்று பூடகமாக சில வார்த்தைகளை தெரிவித்தார்.

அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் தான் அதிரடி ரகம்,
"முதலவர் பன்னீர்செல்வம்அவர்களே... இல்லை இல்லை என சொல்லும் நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறோம்.. அதாவது திமுகவின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று சொல்கிறோம். அதிலும் இந்த 5 வருடங்களும் நீங்களே முதலவராக தொடர்வதற்கு எங்களின் முழு ஆதரவு உண்டு" என அதிரடியாக தெரிவித்தார்.

மேலும் நீங்கள் சிறப்பாக ஆட்சி புரிய வேண்டும் என்றும் அதற்கு வேறு இடத்திலிருந்து உங்களுக்கு தொந்தரவு வந்துவிட கூடாது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
துரைமுருகனின் இந்த பேச்சை கேட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பரித்து கை தட்டினர்,.
அதிமுக உறுப்பினர்களின் முகமோ வாடிப்போனது.
ஏற்கனவே ஓபிஎஸ் - திமுக மறைமுக கூட்டணி என சில பத்திரிக்கைளில் செய்தி வெளியான நிலையின் துரைமுருகனின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
