போரட்டத்தின் போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக  இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் அளித்து,பின்னர் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று காவிரி பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பெரும்  போராட்டத்தை நடத்தினர் திமுகவினர்.

இந்தபோரட்டதில் கலந்துக்கொள்வதற்காக கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவரும் வந்திருந்தார்.

இடுப்பை கிள்ளிய இளைஞர் அணி நிர்வாகி

இந்த போரட்டத்தின் போது, ஜெயமனியின் இடுப்பை கிள்ளி விட்டாராம்  இளைஞர் அணி நிர்வாகி பிரபாகரன் .

இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார்.அதில், "தனது பின்னால் வந்த  பிரபாகரன் திடீரென இடுப்பில் கை வைத்ததால், தான் அதிச்சி  அடைந்ததாக தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தை நகர செயலாளரிடம் தெரிவித்தும் கண்டுக் கொள்ளவில்லை என்பதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  கவனத்திற்கு கொண்டு செல்வேன் என தெரிவித்து உள்ளார் ஜெயமணி.

போரட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட மண்டபத்தில் இருந்தார்  ஜெயமணி. அதன் பின்னர் விடுவிக்கும் போது, மண்டபத்தின் வெளியில் அமர்ந்து நியாயம் கேட்டு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதை அடுத்து சமாதானம்  அடைந்துள்ளார்.