சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், யாரும் இதுவரை பார்த்திராத ஒரு புது விஜயை ரசிகர்கள் பார்த்தனர். எப்போதும் மேடைக்கு வந்தால், சைலண்டாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு மேடையில் இருந்து ஒதுங்கும் விஜய் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெறிக்க விட்டார்.  

பின்னர் மேடையில் அவர் பேசிய பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'சர்கார்' திரைப்படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. ஆனால் நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று பேசினார் விஜய். 

இதைத்தொடர்ந்து பேசிய அவர்,  'மெர்சல்' படத்தில் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் முருகதாஸ். நாங்கள் 'சர்கார்' அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கிறோம்....  பிடித்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார் என அரசியல் கலந்து பேசினார் விஜய்.  ஒரு நிலையில் இவர் பேசியது உண்மையில் அரசியலில் களம் இறங்கத்தானோ என்றே பலருக்கு தோன்றி விட்டது.

இவருடைய அனல் பறக்கும் பேச்சை கேட்ட ரசிகர்கள்... 'தளபதி.... தளபதி... என குரல் எழுப்பி அரங்கத்தையே அதிர வைத்தனர்'

இவர் பேசி முடித்ததும், மேடைக்கு வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், கலாநிதி மாறன்' விஜய்யை தளபதி என அழைத்து... பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து சர்க்கார் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தளபதி ஆக முடியாது:

இந்நிலையில், இன்று திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக சார்பில், ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய பேச்சாளர் மதிமாறன், சில நடிகர்கள் ஷூட்டிங் முடிந்ததும், மீந்து போன வசனங்களை பேசி வருகிறார்கள். அவர்கள் எல்லாம் தளபதி ஆகிவிட முடியாது.

இப்படி வசனம் பேசுபவர்களுக்கு எம்.எல்.ஏ, ஆனால் தான் முதலமைச்சர் ஆக முடியும் என்கிற அடிப்படை கூட தெரியாமல் நேரடியாக முதலமைச்சராக ஆசைப்படுவதாக மறைமுகமாக   சுட்டி காட்டி தாக்கி பேசினார்.

மேலும் மறைந்த திமுக தலைவரால் தளபதி என்று பெயர் சூட்டப்பட்ட, திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தில் ஒரே தளபதி என இவர் கூறியதும்... திமுக தொண்டர்கள் கை தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.