சாதிய மனநிலையில் பேசிய தயாநிதி மாறன், R.S.பாரதிகளின் திமுகவையும் தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி கொந்தளித்துள்ளார்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’’என்று திமுக எம்.எல்.ஏ.,வும் ஐடி விங் மாநில செயலாளருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள புதிய தமிழகம் கட்சியில் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பதிவில், ’’நன்றி கெட்டவர்கள் யார்? எங்கள் மக்களின் வாழ்விடங்களே திராவிடத்தின் தொட்டில்களாக விளங்கின என்பதை மறந்து விட்டீர்களா? பள்ளர், பறையர் கட்சி என்ற முத்திரையோடு வளர்ந்த இயக்கம், ஆனால், அதிகாரமோ உழைக்காத நில பிரபு PTRகளிடம்.
ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் PTR வகையார்களிடம் வந்தது எப்படி?

பாண்டே, மாலன், சுமந்த் ராமன்களை எல்லாம் இவர்கள் வசதியா பிராமணர் முத்திரை குத்திவிடுவார்களாம்... ஆனா இவனுங்க எல்லாம் மனதில் சாதியே இல்லாத நடுநிலை யோக்கியன்களாம், சாதி கேட்ககூடாதாம். பாஜக தலைவராக முருகன் பேசினாலும், அவரது சாதியை தாண்டி இவனுங்களால பார்க்க முடியல. இவர் சாதி இது, இந்த சாதிக்காரன் இந்த அரசியலை தாண்டி பேசக்கூடாது என்று இவர்கள் முடிவு செய்வார்களாம். என்ன கேவலமான புத்தி? பள்ளர்கள் சாதி பார்த்து மதிக்கிறதா மிதிக்கிறதா என்று முடிவு செய்பவர்கள் அல்ல. அப்படி பார்த்தால் இதே மனநிலையில் பேசிய தயாநிதி மாறன், R.S.பாரதிகளின் திமுகவையும் தடை செய்ய வேண்டுமே?

இந்த பார்வை எப்படி வருது? தீண்டாமைக்குள்ளான சாதிகளை எல்லாம் ஒரு பட்டியில் அடைத்தால் அந்த அடையாளம் தான் பொது புத்தியில் இருக்கும்.
நாங்க அதை கறை, உளவியல் சிக்கல் என்று பேசுவது புரியலையா?'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.