அ.தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க அரசுக்கு பேசி வருவதால் கட்சி தாவல் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு கருணாஸ்க்கு சபாநாயகர் எந்த நேரத்திலும் நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
   
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் ஆளாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அரசு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு என்கிற நாடகத்தை அரங்கேற்ற முயற்சித்து வருவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை பறிக்க கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


   
இந்த விவகாரத்தில் டி.டி.வி தினகரன் கூட அமைதி காத்து வருகிறார். ஆனால் ஸ்டாலின் மற்றும் தி.மு.கவினர் தான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். காரணம் கருணாஸ் வைத்திருக்கும் கூவத்தூர் வீடியோ தான் என்கின்றனர். எப்படியாவது கருணாசை தாஜா செய்து அந்த வீடியோவை வெளியிட வைத்துவிட்டால் போதும், எடப்பாடி அரசை ஒரு நாளில் கலைத்துவிடலாம் என்பது தான் தி.மு.கவின் எண்ணமாக உள்ளது.
   
இதனால் தான் கருணாஸ்க்கு சிக்கல் வரும் போதெல்லாம் தி.மு.கவினர் கேட்காமலேயே சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதும் கூட கருணாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தி.மு.க நிர்வாகிகள் பேசி வருவதாகவும், கூவத்தூர் வீடியோவை வெளியிடுங்கள் என்று வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.