திமுக வட்டாரத்தை அலறவிட்ட ஜப்தி நோட்டீஸ்! வங்கிகள் மொத்தமாக சேர்ந்து திமுக பிரமுகரை ஆப்படிக்க காரணம் என்ன?

தி.மு.க.வின் முக்கியப் புள்ளியான கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பேங்க்குகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது சொத்துகளை ஜப்தி அறிவிப்பை நாளேட்டில் விளம்பரமாக வெளியிட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DMK Region Japti notice; banks to ex-minister?

தி.மு.க.வின் முக்கியப் புள்ளியான கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பேங்க்குகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது சொத்துகளை ஜப்தி அறிவிப்பை நாளேட்டில் விளம்பரமாக வெளியிட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட தி.மு.கவில் முக்கியப் புள்ளியாக இருப்பவர் கே.சி.பழனிச்சாமி கரூர் தொகுதி எம்.பியாகவும், அரவக்குறிசி எம்.எல்.ஏ வாகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் தோல்வி அடைந்தார். 

DMK Region Japti notice; banks to ex-minister?

சாதாரண நிலையில் இருந்த இவர், காவிரியில் மணல் அள்ளியும் அதன்மூலம் பொருளாதார நிலையில் உயர்ந்தார். சிமெண்ட் ஆலைகளுக்கு சாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைகள் என இவரது தொழில்கள் பெருகின. அப்படிப்பட்ட கே.சி.பழனிச்சாமிக்கு கடந்த சில ஆண்டுகளாக தொழில்களில் செமத்தியான நஷ்டம். இந்நிலையில், கேசிபி பாரத ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட சில பேங்க்களில் கடனாக எழுபத்து மூன்று கோடியே நாற்பத்து ஒரு லட்சத்து பதிமூன்றாயிரத்து ஐநூற்று எழுபத்து ஒரு (ரூ 73,41,13,571) ரூபாயை திருப்பி செலுத்தவில்லை என்று அவரது பத்துக்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை ஜப்தி செய்வதாக தினசரிகளில் பாரத ஸ்டேட் பேங்க் அதிகாரபூர்வமான அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ள ஜப்தி நோட்டீஸ் கே.சி.பி கரூர் மாவட்ட தி.மு.கவினர் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DMK Region Japti notice; banks to ex-minister?

புதுச்சேரியில் உள்ள கரூர் கே.சி.பி பேக்கேஜிங்ஸ் கம்பெனிக்காக தனது பெயர், மனைவி, தம்பி, தம்பி மனைவி என 4 பேரின் ஷ்யூரிட்டியில் இந்த கடனை வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக இந்த கடனை 60 நாள்களுக்குள் திருப்பி செலுத்தும் படி கடந்த 17.05.2018 அன்று பேங்க் நோட்டீஸ் விட்டது. ஆனால், 60 நாள்கள் கடந்தும் கே.சி.பி இந்த லோனை திருப்பிச் செலுத்தாததால், ஒட்டுமொத்த வங்கியும் கூட்டாக சேர்ந்து பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஜப்தி நோட்டீசை வெளியிட்டு திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios