Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியாருக்கு போட்டியாக வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கிய ஸ்டாலின்.. முழு விவசாயியாக மாறி விளாசல்.!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லையெனில் மக்கள் சார்பில் திமுக நீதிமன்றம் செல்லும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

DMK protests against agriculture bill...mk stalin slams edappadi palanisamy
Author
Kanchipuram, First Published Sep 28, 2020, 12:27 PM IST

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லையெனில் மக்கள் சார்பில் திமுக நீதிமன்றம் செல்லும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பச்சைத்துண்டு, பச்சை நிற மாஸ் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், முன்னதாக வயலில் இறங்கி அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.

DMK protests against agriculture bill...mk stalin slams edappadi palanisamy

தொடர்ந்து, பாஜக அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என ஸ்டாலின் முழக்கமிட்டார். போராட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பாஜக அரசும் அதிமுக அரசும் சேர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கின்றன. பிரதமர் மோடி இந்தியாவில் புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஏழை தாயின் மகன் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் ஏராளமான இந்தியர்களை ஏழைகளாக்கி கொண்டிருக்கிறார். தான் ஒரு விவசாயி என சொல்லிக்கொண்டு எடப்பாடி விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்துகிறார்.  

DMK protests against agriculture bill...mk stalin slams edappadi palanisamy

விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமரும் முதல்வரும் போட்டிப்போட்டுக்கொண்டு செய்கின்றனர். வேளாண் சட்டங்களை  பாஜக கூட்டணி கட்சியே எதிர்க்கிறது. வேளாண் சட்டங்களை ஏற்க மறுத்து பாஜக அரசில் இருந்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகி உள்ளார். விவசாயிகள் நலனை பாதிக்கும் என்பதால் பஞ்சாபில் கூட்டணியில் இருந்து  சிரோமணி அகாலிதளம் விலகியுள்ளது என்றார்.     

DMK protests against agriculture bill...mk stalin slams edappadi palanisamy

விவசாயிகளை ஏமாற்றி வரும் விஷப்பாம்புதான் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். விவசாயக்கடன்களை ரத்து செய்யக்கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பழனிசாமி விவசாயியா? என்று கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லையெனில் மக்கள் சார்பில் திமுக நீதிமன்றம் செல்லும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios