Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடிக்கு திடீரென போன் போட்ட மு.க. ஸ்டாலின்... மோடியிடம் மனம்விட்டு கோரிக்கை வைத்த மு.க. ஸ்டாலின்!!

பாஜகவை திமுக தொடர்ச்சியாக விமர்சித்துவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீரென தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

DMK President M.K.Stalin phone talk with PM Modi
Author
Chennai, First Published Aug 4, 2020, 8:00 AM IST

மருத்துவப் படிப்புகள் அகில இந்திய ஒதுக்கீடுகளில் இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றலாம் என்றும், அதற்காக குழு அமைத்து 3 மாதங்களில் முடிவெடுக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை செயல்படுத்தும்படி அகில இந்திய தலைவர்கள் பலருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி ஆதரவு கோரினார். இந்நிலையில் பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நேரடியாகத் தொடர்புகொண்டார்.

DMK President M.K.Stalin phone talk with PM Modi
அப்போது இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்காக மத்திய, மாநில அரசுஜளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என 3 தரப்பினர் இடம் பெறும் குழுவை அமைத்து கலந்தாலோசித்து இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். DMK President M.K.Stalin phone talk with PM Modi
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் பிரதமர் மோடியிடம் மு.க. ஸ்டாலின் சுட்டிக் காட்டி பேசியுள்ளார். இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் மோடியிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். பாஜகவை பல்வேறு விவகாரங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துவருகிறார். இந்நிலையில் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios