’’வயதான காலத்தில், தன் உதவிக்கு ஒருவர் தேவை என, மணியம்மையை, ஈ.வே.ரா., திருமணம் செய்தார். நான் அவரது வழியில் வந்தவன். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, காலையில் கோபாலபுரம், மாலையில், சி.ஐ.டி., காலனிக்கு செல்வார்’’என 70 வயதில் 28 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு விளக்கம் அளித்த திமுக நிர்வாகி சுந்தரேசனுக்கு கொள்கையை மீட்ட நவீன பெரியார் என தமிழக மக்கள் பட்டம் சூட்டி மகிழ்கின்றனர். 

 

திராவிட கழக நிறுவனர் ஈ.வெ.ரா தனது சொத்துக்களை காக்கும் பொருட்டு பல்வேறு தலைவர்களின் வேண்டுகோளை புறக்கணித்து விட்டு இளம் பெண் மணியம்மையை திருமணம் செய்து கொண்டது அந்நாட்களில் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சாவல்பூண்டி சுந்தரேசன் (70) அண்மையில் 28 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

வார்த்தைக்கு வார்த்தை பெரியாரின் மண், நாங்கள் பெரியாரின் வாரிசுகள் என பேசிவரும் தி.மு.க'வினர் மத்தியில் நான்தான் அடுத்த பெரியார் என செயலில் காட்டியிருக்கிறார் சுந்தரேசன் எனக்கூறி வருகின்றனர். 'சாவல்பூண்டி சங்கப்பலகை' என்ற அமைப்பை உருவாக்கி, அதில் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார். அவரிடம் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயது பெண் அபிதா அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்பொழுது இருவரும் திருமணம் செய்துள்ளனர். அபிதா'விற்கு தி.மு.க சுந்தரேசன் பேத்தி வயது இருக்கும். ஏற்கனவே சுந்தரேசன் திருமணமாகி மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் உள்ளனர்.   

 

சமீப காலமாக பெரியாரின் தத்துவத்தில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கும் திமுகவில் இத்திருமணம் மூலம் பெரியாரின் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்தியதால் சுந்தரேசன் இனிமேல் கழக சொந்தங்களால் #வாழும்_பெரியார் என்று அன்புடன் அழைக்கப்படுவார் என அவருக்கு நெட்டிசன்கள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.