பழங்குடியின பெண் மீது காலணி தாக்குதல்; திமுகவினர் அதிகார மமதையில் உள்ளனர் - அண்ணாமலை சாடல்
தஞ்சை மாவட்டம் குறிச்சியில் திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சுவாமிநாதன் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை பயங்கரமாக சாடியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி தீபலட்சுமி அவர்களின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடியின சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
கோவில் திருவிழாவை பார்த்த அசதியில் தண்டவாளத்தில் உறங்கிய 3 பேர் ரயிலில் அடிபட்டு பலி
வீண் விளம்பரத்திற்காக, பொய்களும் புரட்டுகளுமாய், போலி சமூகநீதி பேசிக்கொண்டு, அதிகார மமதையில், பட்டியல், பழங்குடியினர் சமூக மக்களுக்கு எதிராக திமுகவினர் நடத்தி வரும் வன்முறையின் நீட்சியே இது போன்ற தாக்குதல்கள்.
மேலும் இது போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பட்டியல், பழங்குடியின சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணைத்தில் அதிகம் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.