Asianet News TamilAsianet News Tamil

திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!

விழுப்புரம் கொலை சம்பவம் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் விளக்கத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

dmk party members should be controlled says annamalai to cm stalin
Author
First Published Mar 30, 2023, 11:27 PM IST

விழுப்புரம் கொலை சம்பவம் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் விளக்கத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்துள்ளனர். அதனை இப்ராகிம் மற்றும் தீபக் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் இப்ராகிம் வயிற்றிலும், தீபக் முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தப்பியோட முயன்ற வாலிபர்களை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் முதல்வர் ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் மருத்துவமனைக்கு சென்ற இப்ராஹிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? எடப்பாடி பழனிசாமி சொன்ன ஒற்றை வார்த்தை..!

இதுக்குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது இது குடும்பப் பிரச்சனையால் நடந்த கொலை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த விளக்கத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், விழுப்புரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால், சட்டசபையில் குடும்பச் சண்டை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு மீண்டும் தலைவலி; பாட்னா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!!

குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது. ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும், கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios