7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை! நெல்லை திமுக எம்.பி.ஞானத்திரவியத்திற்கு கட்சி தலைமை.!
கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடு குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடு குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் ஞானதிரவியம் எம்.பி. தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், இருதரப்புக்கு இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.ஞான திரவியத்தை விமர்சித்து பிஷப் பர்னபாஸ் வீடியோ வெளியிடப்பட்டிருந்தார். அதில், திமுக தலைமை எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், திமுக எம்.பி.யின் ஆதரவாளர் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.
இதையும் படிங்க;- மதிமுக எம்எல்ஏ ராஜினாமா அறிவிப்பு.. திமுக அரசுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி.. நாராயணன் திருப்பதி விளாசல்..!
இந்நிலையில் நேற்று காலை சிஎஸ்ஐ மதபோதகர் அலுவலகத்தில் நுழைந்து காட்ப்ரே நோபிளை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க;- திமுக அமைச்சரின் மருமகனை தட்டித்தூக்கிய இபிஎஸ்... அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நெல்லை எம்.பி. ஞானதிரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.