Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்றத்தில் ஒற்றை ஆளாய் கெத்துக் காட்டும் ஓ.பிஎஸ் மகன்... வயிற்றெரிச்சலில் திமுக எம்.பிகள்..!

நாடாளுமன்ற சபாநாயராக ஓம் பிர்லாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை வழிமொழிய உள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத். 
 

DMK MPs in stomach
Author
Tamil Nadu, First Published Jun 19, 2019, 11:23 AM IST

நாடாளுமன்ற சபாநாயராக ஓம் பிர்லாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை வழிமொழிய உள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத். DMK MPs in stomach

தனி ஒருவனாக அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று  அமைச்சர் பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ் மகன் ரவீநதிர நாத் குமார். நேற்று பதவியேற்கும்போது தமிழ் வாழ்க போன்ற கோஷங்களை முன் வைக்காமல் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என கூறியதன் மூலம் பாஜகவினரை வெறுப்பேற்றக் கூடாது, அதிருப்தியடைய வைக்கக் கூடாது என்பதில் ஓபிஎஸ் மகன் கண்ணும் கருத்துமாக இருந்தார். பர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பதற்கேற்ப முதல் நாளிலேயே பாஜக எம்பிக்களின் பாராட்டுகளையும் பெற்று விட்டார் ஓ.பி.ஆர்.DMK MPs in stomach

இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும் ஒற்றையாளாய் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி ரவீந்திரநாத்துக்குக்கு மத்தியில் ஆளும் பாஜக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. புதிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதாலும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

 DMK MPs in stomach

நாடாளுமன்ற சபாநாயராக ஓம் பிர்லாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை வழிமொழிய உள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத். பிரதமர் மோடி ஓம் பிர்லாவை முன் மொழிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஷோசியுடன் ரவீந்திரநாத் குமாரும் வழி மொழிய உள்ளார். இதனால் ஒற்றை ஆளாய் வெற்றி பெற்றாலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். 37 பேர் வெற்றி பெற்றும் நமக்கு ஒரு மரியாதையும் கிடைக்கவில்லையே என திமுக எம்.பிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios