தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திமுக எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ராமேஸ்வரத்திலும் கோவை தெற்கு தொகுதியிலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனக்காகப் பிரசாரம் செய்தவர்களின் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வரிசையில் தனக்கு ஆதரவாக கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்தார்.
இந்த ட்விட்டரைக் கண்ட தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், வானதியின் ட்விட்டரை ரீட்விட் செய்து, “நாங்களும் உ.பி.முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டு கேலி செய்துள்ளார். தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தங்கள் தொகுதியில் வந்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி திமுக வேட்பாளர்கள் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து கேலி செய்தனர். 

Scroll to load tweet…

இந்நிலையில் தற்போது உ.பி. முதல்வர் பிரசாரம் செய்ததற்காக கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்ததற்கு திமுக எம்.பி.யும் நன்றி தெரிவித்து கேலி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.