Asianet News TamilAsianet News Tamil

எத்தனையோ விஷயங்கள் கிடப்பில் இருக்க RS.பாரதி கைதில் அவசரம் காட்டுவது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் சுளீர்..!

மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கும், போது ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டப்படுகிறது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DMK MP rs bharathi bail issue..Court question to the Tamil Nadu Government
Author
Chennai, First Published Jun 16, 2020, 12:32 PM IST

மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கும், போது ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டப்படுகிறது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தாழ்த்தப்பட்ட மக்களையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மே மாதம் 23ம் தேதி கைது செய்யப்படடார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதலில் மே 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் ஜூன் 1ம் தேதி வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

DMK MP rs bharathi bail issue..Court question to the Tamil Nadu Government

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DMK MP rs bharathi bail issue..Court question to the Tamil Nadu Government

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை  ரத்து செய்வதற்கு காவல்துறை காட்டும் அக்கறை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios