பிரதமர் மோடியின் திட்டத்தை நிறைவேற்ற பம்பரமாய் சுழன்று பணி செய்யும் கனிமொழி எம்.பி.!
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்றதும், நாடு முழுவதும் உள்ள நூறு நகரங்களை சீர்மிகு நகரங்களாக மாற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட பல்வெறு நகரகங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பிறமாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொய்வை சந்தித்தாலும் தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார்.
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் பொருட்கள், முட்செடிகள் மற்றும் மணல்கள் நிறைந்து கால்வாய் தண்ணீர் போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. மாநகராட்சி பகுதியின் கழிவு நீர்நிலை செல்லக்கூடிய முக்கிய ஆதரமாக உள்ள பக்கிள் ஓடையினை சுத்தம் செய்யும் பணிகளை திரேஷ்புரம் பகுதியில் கனிமொழி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மழைக்காலத்திற்கு முன்னால் நீர்நிலைகள் செல்லக்கூடிய பகுதிகள் சுத்தப்படுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரக்கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் விரைவில் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.