அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் திட்டத்துக்கு அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பா.ஜ.க பெரும்பான்மை இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.

கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக பாஜக குற்றம்சாட்டிவருகிறது. இந்த விவகாரத்தை வைத்து திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் திமுகவும் பாஜக பாணியில் இந்துக்களை வைத்தே கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில், “பெரும்பான்மை இந்துக்களை பாஜக படிக்க விடாமல் செய்கிறது” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.

