தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. தினந்தோறும் தமிழகத்தில் சராசரியாக 6 ஆயிரம் பேர் அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாமல், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸார் ஆகியோரும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதேபோல தமிழகத்தில் 35 எம்.எல்.ஏ.க்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாயினர்.
இந்நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும் அவருடைய மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜெகத்ரட்சகன், அவருடைய மனைவியும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், இருவருடைய உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெகத்ரட்சனுக்கு கொரோனா தொற்றால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.