கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. 

திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது மகன் கவுதம் சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாயை மறைத்ததாகவும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் கவுதம சிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வங்கிக் கணக்கில் இருக்கும் பணம்  உள்பட ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்.பி. கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.