மத்திய, மாநில அரசுகள் பிச்சை எடுப்பதாக விமர்சித்த  முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில்  ஏழை எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை எம்.பி.தயாநிதி மாறன் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கொரோனா நேரத்தில் அமெரிக்க அரசும், ஏழை நாட்டின் அரசும் பொதுமக்களுக்கு தேவையான பொருள் உதவி, பண உதவிகளை தருகிறது. ஆனால் நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள். மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில் பிச்சை எடுத்து வரும் மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு மட்டுமே என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கீழ் தரமாக பேச்சுக்கு பாஜக தலைவர்ள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன. இந்திய மக்களையும், இந்திய பிரதமரையும் பிச்சைக்காரர்கள் என்பதா? எனக்கூறி டுவிட்டரில் #பிச்சைக்காரன்_தயாநிதி என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரண்ட்  செய்தனர். 


 
இந்நிலையில், இந்து அமைப்புகளின் சார்பில் கோவை பெரியகடை வீதி போலீசிலும், தமிழ்நாடு விஎச்பி சார்பில் சூலூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஊரடங்கு முடிவுக்கு பிறகு விசாரித்து விரைவில் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.