Asianet News TamilAsianet News Tamil

நீங்க யாரு ஏத்துக்கறதுக்கும் ஏத்துக்காம போறதுக்கும்... அண்ணாமலையை விளாசிய திமுக எம்.பி.!!

பேரறிவாளன் விடுதலை தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை திமுக எம்பி செந்தில்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

dmk mp criticized annamalai and his statement regarding perarivalan release
Author
Tamilnadu, First Published May 18, 2022, 5:01 PM IST

பேரறிவாளன் விடுதலை தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை திமுக எம்பி செந்தில்குமார் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். அந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் தன்னை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திராவிட இயக்கங்களும், தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

dmk mp criticized annamalai and his statement regarding perarivalan release

மேலும் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது டுவிட்டர் பதிவில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் அண்ணாமலையின் இந்தக் கருத்திற்கு திமுக எம்பி செந்தில் குமார் விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், தீர்ப்பே சொல்லியாச்சு நீங்கள் யாருங்க சார் ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாததற்கும். போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு. கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க. ஓ மீசையும் இல்லையா என்னால் உதவ முடியாது, மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பதிவு போட்டு வருகின்றனர். அதே வேளையில், திமுகவினரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios