Asianet News TamilAsianet News Tamil

DMK : மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் இந்துக்கள் இல்லையா? சொல்லுங்க மோடி, அமித்ஷா ? ஆ.ராசா சரமாரி கேள்வி

A Raja : 1932 வரைக்கும் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். சமஸ்கிருதத்துக்கும் எம்பிபிஎஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம்? அதான் இப்போ நீட். அந்த நீட் தேர்வில் என்ன கேள்வி கேட்கிறார்கள்.

DMK mp a raja speech about Dravidian govt vs Bjp govt politics
Author
First Published Jun 25, 2022, 8:53 PM IST

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு வேருக்கு விழா தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.அதுமட்டுமல்லாமல், காணொளி வாயிலாகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த வேருக்கு விழா நிகழ்ச்சியில் திமுக எம்.பி ராசா பேசியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜகவின் அரசியல்

அதில் பேசிய அவர், 'நான் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். 3 முறை மத்திய அமைச்சராக இருக்கிறேன். இந்துத்துவாவை கடைப்பிடிக்ககூடிய பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக இருந்திருக்கிறார். அன்றைக்கு பாஜகவுக்கு ஓரளவு கணிசமான எண்ணிக்கையில், பாஜகவுக்கு உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் அப்போதெல்லாம் அருவெறுப்பான கூச்சல் இல்லை.

DMK mp a raja speech about Dravidian govt vs Bjp govt politics

இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

தற்போது அப்படியில்லை, இந்த முறை நாடாளுமன்றத்திற்கு நாங்கள் போகும்போது, எரிச்சலடையும் அளவுக்கு சபாநாயகர் உட்காரும்போது பாரத்மாதா கி ஜி,ஜெய் ஸ்ரீராம் என்றும் எரிச்சல் வரும் அளவுக்கு கத்துகிறார்கள். 1932 வரைக்கும் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். சமஸ்கிருதத்துக்கும் எம்பிபிஎஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம்? அதான் இப்போ நீட். அந்த நீட் தேர்வில் என்ன கேள்வி கேட்கிறார்கள்.

நீட் தேர்வு

கவாஸ்கர் இதுவரை அடித்த மொத்த ரன்கள் எவ்வளவு ? கவாஸ்கர் எடுத்த மொத்த ரன்னுக்கும், நாளைக்கு நான் போட போற ஊசிக்கும் என்ன சம்பந்தம் ? அப்படின்னா கிரிக்கெட்டை பார்ப்பது யார் ? கிரிக்கெட் டீமில் இருப்பவர்கள் யார் ? இன்னைக்கு இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் டீமில் ஒரே ஒரு வன்னியர் உண்டா? ஒரே ஒரு நாடார் உண்டா ? முக்குலத்தோர் உண்டா ? ஒரு கவுண்டர் உண்டா? ஒரு பறையர் உண்டா ? ஒரு பள்ளர் உண்டா ? ஆனால் கோப்பையை வாங்கிட்டு வர்றவனை, நாம டிவியில் பார்த்துட்டு இருப்போம்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

DMK mp a raja speech about Dravidian govt vs Bjp govt politics

ஆரிய மாடல்

இதுதான் ஆரிய மாடல் ஆகும். இதை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, அதற்கான சட்டத்தை நிறைவேற்றி, கையெழுத்து போடாமல் இருந்த கவர்னரை, கையெழுத்து போட வைத்தாரே, இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர், அதுதான் திராவிட மாடல். பெண் வயதுக்கு வந்ததும், நன்கு படிக்க வைத்து, 18 வயதுக்கு மேல் திருமணம் செய்து வை என்று சொன்ன பெரியார் இயக்கத்தில், ஒரு ஆன்மீகவாதி இருப்பதிலே தவறில்லை என்ற காரணத்தினால்தான், சேகர்பாபுவை நாங்கள் வாழ்த்துகிறோம்.

மாட்டுக்கறி அரசியல்

மாட்டுக்கறி சாப்பிடற எல்லா நாட்டு பிரதமரையும் அவர் கட்டிப்பிடிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தைரியம் இருந்தால், மோகன் பகவத்துக்கு தைரியம் இருந்தால், மோடிக்கு தைரியம் இருந்தால், அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால், முஸ்லிம்களை தவிர்த்து  மாட்டுக்கறி சாப்பிடுகின்ற யாரும் இந்துக்கள் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்று ஆவேசமாக பேசினார் திமுக எம்.பி  ஆ.ராசா.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios