தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சம் கோடியை 20 ஆண்டு காலத்துக்கு தள்ளி வைப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.  

2ஜி விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, இப்போது உண்மையிலேயே 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்துள்ளது ஏன்?” என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யும் கொறாடவுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சம் கோடியை 20 ஆண்டு காலத்துக்கு தள்ளி வைப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 90 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தொலைத் தொடர்புத் துறை தொடர்ந்து இயங்க வேண்டும், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கப்பட வேண்டும், நுகர்வோரின் விருப்பம் ஆகிய மூன்றும்தான் முக்கியம்” என்று தெரிவித்தார்.