தி.மு.க., எம்.எல்.ஏ-க்கள் மூவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அவர்கள் மூவரும் தங்களை தாங்களே பயன்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் கொரோனா நோய் முதன் முதலாக பிறநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்டது. இப்போது எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களும்கூட விதிவிலக்கல்ல. சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இந்த நோய்க்கு ஆளாகி பலியானார். இப்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த பழனிக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சென்னை பகுதியில் உள்ள மேலும் மூன்று திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு நோய் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மூன்று பேரும் அவரவர் வீட்டில் தங்களை தாங்களே தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கொரோனா நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள். ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஐஸ்ஹவுஸ் பகுதியில் நிவாரணம் வழங்கியது தான் தோற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவருடன் பணியாற்றிய மேலும் 4 திமுக நிர்வாகிகளுக்கும் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏ கடந்த சில தினங்களாகவே நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இதனால், சாதாரண மக்களிடம் அதிகம் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக நோய்த் தொற்று பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல இப்போது தனிமையில் உள்ள மூன்று திமுக எம்எல்ஏ.,க்களும் அதிக அளவில் கொரோனா நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டார்கள் எனக்கூறப்படுகிறது