ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அடுத்தடுத்து சில முக்கிய மரணங்கள் நிகழ்ந்தன. அமைச்சர்களின் பி.ஏ.க்கள் விபத்தில் சிக்கி இறந்தனர். இதையெல்லாம் பார்த்துவிட்டு ’அன்று தன் முன்னால் நடித்து! தனக்கு துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வினரை ஜெ., ஆவி வரிசையாக பழிவாங்குகிறது.’ என்று சென்சிடீவ் பேச்சு கிளம்பியது. பாவம், பரிகாரம், பூஜை, புனஸ்காரங்களில் நம்பிக்கை வைத்துள்ள அ.தி.மு.க.வும் இதை அப்படியே நம்பியது. 

இந்த நிலையில் கடந்த வாரம், தி.மு.க.வில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இறந்தனர். மாஜி அமைச்சரான கே.பி.சாமியும், காத்தவராயன் எனும் மக்கள் செல்வாக்கு மிக்க நபரும்தான் இப்படி அடுத்தடுத்து மரித்தனர்.

இதனால் திமுக பெரும் வருத்தத்தில் மூழ்கி உள்ளது. தொடர் மரணங்களால் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மார்ச் 1-ம் தேதியன்று தவிர்த்தார். "ஸ்டாலினின் மனம் பெரிதாய் சஞ்சலமடைந்திருப்பதை அக்கட்சியின் மிக முக்கிய நிர்வாகிகளே தெளிவாய் அறிந்திருக்கின்றனர்.

மேலும் இந்த தொடர் மரணங்களுக்குப் பின் கட்சியின் நல்ல நிலைமைக்காக முக்கிய ஜோதிடர்களிடம் கலந்துஆலோசிக்கப்பட்டதாம். அவர்களும் தீட்டு விலகிடவும், இனி நன்மைகள் கட்சியினுள் மேலோங்கிடவும் ஐடியா கொடுத்து உள்ளனராம். மேலும் ’கண் திருஷ்டியாலேயே கழகத்தில் இந்த கெட்டவை நடந்துள்ளன’ என்றார்களாம் ஜோஸியர்கள்.