தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவைத்  தொடர்ந்து நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்க திமுக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.  மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இன்று மாலை 5 மணியளவில் ஆளுநரைச் சந்திக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால், சட்டப்பேரவையை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

ஆளுநர் சந்திப்பை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் தனபாலையும் திமுக சந்திக்க முடிவு செய்துள்ளது.

பெரும்பான்மையை அதிமுக அரசு இழந்துவிட்டது என்றும், சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளனர்.