Asianet News TamilAsianet News Tamil

#SaveGirlsFromSanghis : பாஜகவை அறவிடும் திமுக.! இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள் !

#SaveGirlsFromSanghis : திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா,' இதே வேலையாக திரியும் இந்த மிருகங்களை என்ன செய்வது.? இத்தகைய மிருகங்களை மட்டுமே வைத்து பிழைப்பை நடத்தும் காவிக் கொடூரர்களை என்ன செய்வது'  என்று குறிப்பிட்டுள்ளார்.

Dmk mla trb rajaa tweets viral via twitter #SaveGirlsFromSanghis hashtags trends in india
Author
First Published Jun 11, 2022, 11:29 PM IST

திமுக எம்.பி.யும்,முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர் பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா  மன்னர்குடி தொகுதியில் இருந்து 2011, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.பி ராஜா வெற்றி பெற்றார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்தபிறகு அந்தப் பொறுப்புக்கு டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dmk mla trb rajaa tweets viral via twitter #SaveGirlsFromSanghis hashtags trends in india

தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக, கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். மேலும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது.

டி.ஆர்.பி ராஜா - ட்வீட்

திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வேண்டும் என்ற குரல் கோட்டை வரை ஒலிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் இந்த பட்டியலில் மூன்று முறை எம்.எல்,ஏவாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் அமைச்சர் பதவி நிச்சயம் என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா பாஜக பிரமுகர் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு கல்லூரி என்ற பெயரில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 300 க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியின் சேர்மேன் முன்னாள் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் ஆவார். இவர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் கல்லூரியின் தாளாளர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரிகளிடம் அருவருக்கதக்க வகையில் மிகத் தவறாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. 

பாஜக பிரமுகர்

Dmk mla trb rajaa tweets viral via twitter #SaveGirlsFromSanghis hashtags trends in india

இதற்கிடையில் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தாஸ்வின் அந்த மாணவியின் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாக நிற்கச் சொல்லி வீடியோ காலில் பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த வீடியோ கல்லூரி மாணவர்களிடையே திடீரென பரவியது, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் அந்த கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குள் செல்ல மறுத்து நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசம்  செய்ய முயன்றனர்.

அப்போது மாணவிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவிகள் அங்கு நடந்தவற்றை குறித்து புகார் கொடுத்தனர். அந்த புகாரில், கல்லூரி சேர்மன் தாஸ்வின் கல்லூரி படிக்கும் மாணவிகளின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி அவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். இந்த சம்பவத்திற்கு உள்ளாகியிருக்கும் மாணவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு அந்த மாணவியை தனியாக அழைத்து செ*** டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் ஜாஸ்வின்.

ஒருகட்டத்தில் அந்த மாணவியை ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக அழைத்து வீடியோ காலில் பேச வைத்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் சக மாணவிகள் குறித்து கேட்டறிந்து அவர்களிடம் அதேபோல் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதை நிரூபிக்க எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள் சார்... தவறு நடந்த பிறகு காப்பதை விட தவறு நடப்பதற்கு முன்பே எங்களை காப்பாற்றுங்கள், டாஸ்வினுக்கு கிடைக்கும் தண்டனை அந்தப் பெண்ணுக்கு கிடைத்த நீதி. எல்லோருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். கல்லூரி மூடிவிட்டால் எங்கள் படிப்பு வீணாகி விடும். உடன்படிக்கும் பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தது எங்களுக்கு அச்சமாக உள்ளது. 

இணையத்தில் ட்ரெண்டிங்

படிப்பை நிறுத்தாமல் வேறொரு கல்லூரியில் படிக்க அரசு உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த செய்தியை டேக் செய்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா,' இதே வேலையாக திரியும் இந்த மிருகங்களை என்ன செய்வது.? இத்தகைய மிருகங்களை மட்டுமே வைத்து பிழைப்பை நடத்தும் காவிக் கொடூரர்களை என்ன செய்வது'  என்று குறிப்பிட்டுள்ளார். #SaveGirlsFromSanghis என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இந்த ஹேஸ்டேக்க்கில் நெட்டிசன்கள் பாஜகவினரை கலாய்த்து மீம்ஸ் மற்றும் வீடியோ பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13 தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios