சேகர் ரெட்டியுடன் கை கோர்த்த திமுக..! அதுவும் ஸ்டாலினுக்கு நெருக்கமான எம்எல்ஏ..!
திமுக தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் சர்ச்சைக்குரிய ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் சர்ச்சைக்குரிய ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருந்தாலும் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஒருவர் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன். எம்எல்ஏ ஆவதற்கு முன்பிருந்தே இவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம். சொல்லப்போனால் ஸ்டாலின் குடும்பமும் எம்எல்ஏ ராஜேந்திரன் குடும்பமும் ஒன்னுக்குள் ஒன்று. ஸ்டாலின் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு வரவு செலவு கணக்கு பார்க்கும் அளவிற்கு ராஜேந்திரன் மிகவும் முக்கியமானவர்.
ஸ்டாலின் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரும் அளவிற்கு ராஜேந்திரன் செல்வாக்கு வாய்ந்தவர். திருவள்ளூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பசை பார்ட்டியாக வலம் வரக்கூடியவர். மேலும் விவசாயத்திலும் தனி முத்திரை பதித்தவர். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்களை விட திமுக தொண்டர்களுக்கு இவர் தான் மிகவும் பரிட்சையம் ஆனவர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மிக முக்கிய இலாகாவுடன் அமைச்சராகும் அளவிற்கு ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், மகன் உதயநிதி என அனைவருடனும் நல்ல உறவை கொண்டிருப்பவர். இப்படிப்பட்டவர் தான் சேகர் ரெட்டியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதோடு புகைப்படத்திற்கும் துணிச்சலாக போஸ் கொடுத்துள்ளார். சேகர் ரெட்டி விஷயத்தை வைத்து வைத்து தான் ஓபிஎஸ்க்கு எதிராக ஸ்டாலின் அரசியல் செய்து வந்தார். மேலும் அதிமுக அரசு இயங்குவதே சேகர் ரெட்டியால் தான் என்று கூட ஸ்டாலின் விமர்சித்து வந்தார்.
இப்படி ஒரு அரசியல் சூழலில் சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கான ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை குழுவில் எம்எல்ஏ ராஜேந்திரனின் மனைவி இந்திராவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தான் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் என்கிற வகையில் சேகர் ரெட்டி பங்கேற்றார். அப்போது தான் ராஜேந்திரன் சேகர் ரெட்டிக்கு சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.