கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி மாணவர்களை  கட்டாயப்படுத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதைக்கு சொந்தமான கல்லூரி ஏழை மாணவியை கள்வி கட்டணம் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கொரோனா பரவல் தடுக்க தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,’’பள்ளி மற்றும் கல்லூரிகளில்  அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தையும், நிலுவையில் உள்ள தற்போதைய  நிகழாண்டுக்கான கட்டணத்தையும் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்துவதாக அரசின்  கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து  மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்வி கட்டணம் செலுத்தக்கோரி  கட்டாயப்படுத்தக்கூடாது. ஊரடங்கு முடியும் வரை பேரிடர் மேலாண்மை  சட்டம் 2005ன் கீழ் இதனை அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள்  கடைபிடிக்க வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆனால் அதனையும் மீறி, திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த ஆலடி அருணா பெயரில் ஆலங்குடியில் இயங்கி வரும் ஆலடி அருணா நர்சிங் கல்லூரியின்  பயின்று வரும்  மூன்றாமாண்டு படித்து வரும் மாணவியின் கல்விக்கட்டணம் முழுவதையும், மார்ச் மாத விடுதி உணவு கட்டணத்தையும் செலுத்துமாறு அந்த கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கல்லூரி முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏவுமான போங்கோதை அருணாவின் கணவர் பாலாஜி, அவர்களது மகள்கள் சமந்தா பாலாஜி, காவ்யா பாலாஜி ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.   


திமுகவினர் கொரோனாவை எதிர்த்து ஒன்றிணைவோம் வா என அழைத்து கோஷமிட்டு வருகிறது. ஆனால் அந்தக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான பூங்கோதை குடும்பத்தினரால் நடத்தப்படும் கல்லூரி, மாணவியின் கல்வி கட்டணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதே பூங்கோதை சில தினங்களுக்கு முன், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூரி விடுதி ஒன்றை தனிமை வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஒரு மருத்துவரும் கூட.