சென்னை சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மா.சுப்பிரமணியனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடைய மனைவிக்கும் கொரோனா உறுதியானது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இதனையடுத்து, அவரது இளைய மகன் அன்பழகனுக்கும் (34) தொற்று இருப்பது உறுதியானது. பின்னர்,  சென்னை கிங்ஸ் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு திமுகவின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.