கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கே.வி.கே  குப்பத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். இதையறிந்து திமுக முன்னணியினர் அங்கு குவிந்து வருகின்றனர்.

திருவொற்றியூர் தொகுதி திமுக எம் எல் ஏ வாக இருந்து வந்தவர் கே.பி.பி.சாமி. 1962ம் ஆண்டு பிறந்த இவர் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முன்னாள் அமைச்சரான சாமி, திமுகவின் மாநில மீனவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் பால்ராஜை 4683 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக சாமி பதவி வகித்து வந்தார். இவரது பதவி காலத்தில் பல்வேறு மீனவ பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சாமி, 2016ல் மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கே.வி.கே குப்பத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். இதையறிந்து திமுக முன்னணியினர் அங்கு குவிந்து வருகின்றனர்.

இவரது மனைவி உமா சில வருடங்களுக்கு முன்பாக மாரடைப்பால் மரணமடைந்தார். அதன்பிறகு மகன் இனியவனோடு அவர் வசித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு இனியவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பியர் கிரில்ஸ்டன் சூப்பர் ஸ்டார்..! பட்டைய கிளப்ப மார்ச்சில் வருகிறார்..!