தமிழ்நாட்டிற்கு தனி கொடி வேண்டும்..! பாஜகவினரை அலறவிடும் திமுக எம்எல்ஏவின் கோரிக்கை
தமிழ்நாடு தமிழகம் பிரச்சனை எழுந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு என்று தனி கொடி வேண்டும் என திமுக எம்எல்ஏ கருணாநிதி கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக- பாஜக மோதல்
திமுக அரசிற்கும் பாஜகவிற்கும் ஏற்பட்டுள்ள மோதலானது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. திமுக அரசிற்கு எதிராகவும் அமைச்சர்களுக்கு எதிரான கருத்துகளையும் அவ்வப்போது பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்க்கு திமுகவினரும் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இப்படி மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிற்கு எதிரான மோதல் போக்கை கடுமையாக கையாண்டு வருகிறார். அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ் எஸ் சித்தாந்தங்களை கூறி வருவதாகவும், திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்க்கு திமுக மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தன.
தமிழ்நாடா.? தமிழகமா.?
இதன் அடுத்த கட்டமாக காசி தமிழ்சங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாள்ரகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக என தெரிவித்து இருந்தார். இந்த கருத்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழ்நாடு, பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தவிர்த்தார். இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்து ஆளுநர் மாளிகை சார்பாக அச்சடிக்கப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு முத்திரையை மறைத்து இந்திய அரசின் முத்திரை பதிவு செய்யப்பட்டது.
ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்.. ஓபிஎஸ் சொல்லியதுதான் எங்கள் கருத்தும்.. டிடிவி.தினகரன்..!
இந்த பிரச்சனைகளுக்கு ஆளுநரின் செயல்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கர்நாடகாவிற்குத் தனி மாநில கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கென ஏன் கூடாது தனிக்கொடி?1970ல் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த தனிக்கொடி கோரிக்கையை மீண்டும் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி தேவை. அது நம் உரிமை என பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்