சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துவிட்டு, திமுக பதுங்குவதாக கூறுகின்றனர். புலி பதுங்குவது பாய்வதற்குதான் என 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த கு.ராதாமணியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கு.ராதாமணியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்  திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் எம்.எல்.ஏ. பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்லெ்வம் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர் கு.ராதாமணி என புகழாராம் சூட்டினார். அவரின் மறைசு ஈடுசெய்ய முடியாத இழப்பு என் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சி போங்க பேசினார்.

 

மேலும் பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றது குறித்து பேசினார். அதில் 3 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க நினைத்தார்கள். அதை திமுக தடுத்தி நிறுத்தியுள்ளது. 

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துவிட்டு, திமுக பதுங்குவதாக கூறுகின்றனர், புலி பதுங்குவது பாய்வதற்குதான். பாயவேண்டிய நேரத்தில் பாயும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.