தமிழகத்தில் அமைச்சர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுகின்றனர் - முன்னாள் அமைச்சர் வீரமணி விமர்சனம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் அந்தந்த பகுதிகளில் குறுநில மன்னர்கள் போல செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்மாங்குப்பம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 107வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிற்பபு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திராவிட கட்சியை கொண்டு வர திமுக என்ற கட்சியை அறிஞர் அண்ணா 18 ஆண்டுகளுக்கு பிறகு தான் எம்.ஜி.ஆர் ஆதரவோடு ஆட்சி பிடிக்க முடிந்தது.
ஆனால், கட்சியை தொடங்கிய 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக என்றால் உலக வரலாற்றுச் சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். அண்ணா வகுத்துக் கொடுத்த் கொள்கையை மறந்து திமுக குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் அனைவரும் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
திமுகவில் அப்பா, மகன், பேரன், மச்சான், மருமகன், அண்ணன், சகோதரி என வாரிசு அரசியல் செய்து வரும் இந்த நிலை உலகத்தில் வேறு எங்குமே இல்லை. அப்படி இருந்த ஆந்திரம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் ஆட்சியை இழந்துள்ளது. இதே நிலைமை தான் தமிழகத்தில் ஏற்படப்போகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள முருகன் கோயில் தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக அரசு இயந்திரம் மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. வருகின்ற தேர்தலில் அதிமுகவின் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்று பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு அதிமுக லட்சியம் வெல்லும் என தெரிவித்தார்.