Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையைப் பார்த்து திமுக அமைச்சர்கள் பயந்து நடுங்குகிறார்கள்.. தெறிக்கவிடும் சசிகலா புஷ்பா.!

தமிழகத்தில் இன்று ஒவ்வொரு அமைச்சரும் அண்ணாமலையைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பாஜக மாநில  துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

DMK ministers are trembling with fear when they see Annamalai .. Sasikala Pushpa says!
Author
Tuticorin, First Published Jun 3, 2022, 10:53 PM IST

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. 2014-ஆம் ஆண்டில் 7 மாநிலங்களில் மட்டும் ஆட்சி செய்த பாஜக, இன்று 18 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. உலகிலேயே மிகப் பெரிய கட்சியாகவும் பாஜக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றாலும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மக்களுக்கு தேவையானதை மத்தியில் இருந்து பெற்று கொடுத்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் ஏழ்மை நிலை 22 சதவீதமாக இருந்தது. பாஜக ஆட்சியில் அந்த நிலை 10 சதவீதமாக குறைந்துள்ளது. 

DMK ministers are trembling with fear when they see Annamalai .. Sasikala Pushpa says!

ஜிஎஸ்டியின் மூலம் நாட்டுக்கு பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. ரயில்வே துறையில் மிகச் சிறந்த கட்டமைப்பில்  உலகின் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு பாஜக செய்திருக்கும் மிகப்பெரிய நன்மை முத்தலாக் தடை சட்டம். இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களின் உரிமையையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒவ்வொரு அமைச்சரும் அண்ணாமலையைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.  திமுகவால் டாஸ்மாக்கை மூட முடியவில்லை அதிமுக ஆட்சியில் மது பழக்கத்தால் பல பெண்கள் விதவையாகி விட்டதாக கனிமொழி கூறினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்கை தடை செய்வதாகவும் கூறினார். ஆனால், இன்று டாஸ்மாக்கிற்கு காவல் துறையின் காவல் போட்டுள்ளது திமுக ஆட்சி.

DMK ministers are trembling with fear when they see Annamalai .. Sasikala Pushpa says!

திமுகவினர் தற்போது திருட்டு மணலை அள்ள தொடங்கியுள்ளனர். அதிமுகவை குறை சொன்னவர்கள், குவாரியை திறந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளுகிறார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக பாஜக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு விலையை குறைப்பேன் என்று தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்திருந்தாரே. ஸ்டாலின் ஏன் குறைக்கவில்லை? எங்கே சென்றார்? அவரிடம் சமையல் காஸ் சிலிண்டரை குறைப்பது பற்றிய கேள்விகளை கேளுங்கள்” என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios