பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல... கோவையில் போஸ்டர் ஒட்டி பாஜகவை அலறவிடும் திமுக

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனையொட்டி கோவை நகரில் போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல என்ற வாசகத்தையும் அச்சடித்துள்ளனர். 
 

DMK members put up posters in Coimbatore to welcome the name of the opposition alliance as India

நாடாளுமன்ற தேர்தல்- களம் இறங்கும் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்தவகையில், இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை இலக்கு வைத்து களப்பணியை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவை மீண்டும் வெற்றி பெற விடாமல் தடுக்கும் வகையில் நாட்டில் உள்ள பெரும்பாலானா எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது. இந்தநிலையில் எதிர்கட்சிகளின் கூட்டம் பாட்னாவை தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் ஒன்றிணைந்த அணிக்கு   INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

DMK members put up posters in Coimbatore to welcome the name of the opposition alliance as India

போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய திமுக

அதாவது Indian National Democratic Inclusive Alliance- இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்பதை INDIA என குறிப்பிட்டுள்ளனர். இந்த பெயருக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கோவையில் திமுக இளைஞரணியினர் INDIA குறித்து 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "2024 திராவிட மாடலின் INDIA. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல..." என்ற வாசகங்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை லங்கா கார்னர், ரேஸ் கோர்ஸ், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்

பாஜக அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios