சென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் திமுக பிரமுகரான இவர் காஞ்சி வடக்கு மாவட்ட பிரதி நிதியாகவும் ஊராட்சி கழக செயலாளராக உள்ளார். இவரது சகோதரர் லோகநாதன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இவர்கள் ஒரே குடும்பமாக மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஃபார்சுனர் காரின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பசவத்தை அறிந்த திமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் தாம்பரம் உள்ளிட்ட அனைத்து பிரமுகர்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் தாக்குதலுக்கு அரசியல் முன்விரோதம் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூர் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி என்பவரின் வீட்டில் இதேபோன்று வெடிகுண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.