திமுக பொதுக்குழு பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடியது. இதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுக பொதுக்குழு இன்று கூடியது. அரசியல் சூழ்நிலை மத்தியிலும் மாநிலத்திலும் மாறியுள்ள சூழ்நிலையில் திமுகவுக்குள்ளும் மாற்றம் கொண்டுவரும் பொதுக்குழுவாக  இது அமைந்துள்ளது. 

திமுக முக்கிய அரசியல் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செயல் தலைவர் நியமனம் குறித்த விதி உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,   தீர்மானம் பற்றிய விபரம்...

தீ ர் மா ன ங் க ள்.

இரங்கல்  தீர்மானம்.

1.          500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு

2.         தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம்.

3.         ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

4.         தமிழக விவசாயிகளின் தணியாத துயரம்!

5.         மதுரவாயல்  - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்

6.         """"நீட்"" - நுழைவுத் தேர்வை ரத்து செய்க!

7.         மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை

8.         கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் வழிபாட்டிற்கு அனுமதி

9.         இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

10.        சேலம் இரும்பாலையைத் தனியார்மய மாக்கும் முயற்சியைக் கைவிடுக!

11.         கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை!

12.        வர்தா புயல் நிவாரணம் வழங்குக!

13.        உள்ளாட்சித் தேர்தல்

14.        பொது விநியோகத் திட்டக் குளறுபடிகள்

15.        தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.

16.        ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.

17.செயல் தலைவர் நியமன 18 வது விதியை திருத்துவது.

18. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமனம்.

உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.